கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்களர் பட்டியல் இன்று வெளியீடு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.

கோவை மாவட்த்தில் 2017 ஜனவரி 6 ம் தேதி முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.



அதன்படி, தற்சமயம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,34,992 ஆண்கள், 1,40,641 பெண்கள், 28-மூன்றாம் பாலினம் என 2,75,661 வாக்காளர்களும், சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,42,946 ஆண்கள், 1,46,304 பெண்கள், 11-மூன்றாம் பாலினம் என 2,89,261 வாக்காளர்களும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,09,659 ஆண்கள், 2,09,038 பெண்கள், 68-மூன்றாம் பாலினம் என 4,18,765 வாக்காளர்களும் உள்ளனர்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,56,461 ஆண்கள் 1,53,767 பெண்கள், 27-மூன்றாம் பாலினம் என 3,10,255 வாக்காளர்களும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,52,808 ஆண்கள், 1,53,342 பெண்கள், 54 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,06,204 வாக்காளர்களும் உள்ளனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,22,094 ஆண்கள், 1,21,983 பெண்கள், 12 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,44,089 வாக்காளர்களும், சிங்காநல்லூர் சட்மன்ற தொகுதியில் 1,53,637 ஆண்கள், 1,53,819 பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,07,484 வாக்காளர்களும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 1,46,553 ஆண்கள், 1,49,278 பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,95,859 வாக்காளர்களும் உள்ளனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,04,692 ஆண்கள், 1,10,964 பெண்கள், 14 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,15,670 வாக்காளர்களும் உள்ளனர். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 96,566 ஆண்கள், 1,01,709 பெண்கள், 13 மூன்றாம் பாலினம் என மொத்தம் 1,98,288 என மொத்தம் வாக்காளர்களும் உள்ளனர். 

அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தமாக 14,20,408 ஆண்கள், 14,40,845 பெண்கள், 283 மூன்றாம் பாலினம் என மொத்தம் 28,61,536 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கோவை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி இன்று (அக்டோபர் 3) முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றுத் திருத்தம் மேற்கொள்ள 8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்னடர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...