கோவை ரயில் நிலையத்தில் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிறைவு விழா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வச்சபாரத் தூய்மை இந்தியா நடவடிக்கைகளில் தற்போது நடைபெரும் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிகழ்வுகளின் நிறைவாக இன்று காந்தி ஜெயந்தி தினத்தன்று தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் நடைபெற்றது.

தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் இன்று தூய்மை பணிகள் நடைபெற்றன.



இதனை கோவை ரயில்வே மேலாளர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவை ரயில்வே ஊழியர்கள், நேரு கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரயில் நிலையத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், ரயில் நிலைய பயணிகளுக்கு தூய்மை பணியை குறித்து விழிப்புணர்வு எற்படுத்தியும், கோவை ரயில் நிலைய ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூய்மை பணியின் உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...