தொண்டாமுத்தூர் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை சுகாதாரப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் பேணிகாப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் கடந்த செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி தொண்டாமுத்தூர் ஒன்றியம், வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு 02.10.2017 வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் முழு சுகாதாரபணிகள் மேற்கொள்ளும் இயக்கமாக நடைபெற்று வருகின்றது.



மேலும், தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப்பணிகளை அனைத்து நிலைகளிலும் முடுக்கிவிடுதல், சுகாதாரத்தினை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி பொது இடங்களில் துப்புறவு பணிகளை மேற்கொள்ளுதல், சுகாதாரத்தினை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்தல் மற்றும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த இயக்கத்தின் மூலம் கோவை மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகளும், தூய்மை சுகாதாரப்பணிகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இப்பணிகளுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை தொடர்ந்து வழங்கிட கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...