கோவை பேரூர் அடுத்து சிறுவாணி சாலை அருகே உள்ள சித்திரைசாவடி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் நிரம்பியது.
இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் இன்று அணைக்கு விடுமுறையையொட்டி குளிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சபரி (17) மற்றும் ஹரிபிரகாஷ் ஆகியோர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே நண்பர்கள் சேற்றில் சிக்கி இறந்ததை கண்டு உடன் வந்த நண்பர்கள் கதறினர்.
இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிபிரசாத்தின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் இறந்தவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.