பூஜை விழாவினை முன்னிட்டு பூமார்க்கெட்டில் குவியும் பொதுமக்கள்


ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசல் அலைமோதி வருகிறது.



கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விளையும் பூக்கள் கோவை பூமார்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. 



பொதுவாக அனைத்து பகுதிகளைக் காட்டிலும் பூமார்க்கெட் பகுதியில் பூக்கள் விலை சற்று குறைவாக இருப்பதால் விழாக் காலங்களின் போது மக்கள் பூமார்க்கெட்டை நோக்கி படையெடுப்பது வழக்கம். 



அதேபோல், வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பூ விற்பனையாளர்கள் பூமார்க்கெட் பகுதியில் குவிந்துள்ளனர்.

இதனிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகன விபத்தை தடுக்கும் விதமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...