தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நேற்று (27.09.2017) மாலை 4.00 மணிக்கு வடகோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் வெ. நா. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். பின்னர், செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



அதில், வருகின்ற (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பீளமேடு விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பினை அளிப்பதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று வரவேற்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல்லில் செப்டம்பர் 16 ம் தேதி அன்று நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று லட்சக்கணக்கிலே கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து கழகம் வலுப்பெறுவதற்கு முனைப்புடன் செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில் மக்களை பாதிக்கின்ற வகையில் அறிவித்திருக்கின்ற புதிய வரி விதிப்பு , குப்பைகளுக்கு வரி , குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்கள், அனைத்திலும் சிறப்பாக பங்கேற்ற மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் சிங்கை ஆர்.ரவிச்சந்திரன், சாந்தி , தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், கதிர்வேல்சாமி, உமா மகேஸ்வரி, பகுதிக் கழக செயலாளர்கள் கே.எம். சுந்தரம், சா.மாணிக்கம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் இளஞ்சேரன், தளபதி இளங்கோ, பையாக்கவுண்டர், முருகேசன், மாலதி நாகராஜன், மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...