நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமைகளுக்கான ஆணைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் வன உரிமைகளுக்கான ஆணைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று (26.09.2017) நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 493 பழங்குடியினர்களுக்கு வன உரிமைகளுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



அப்போது அவர் பேசுகையில், பழங்குடியின மக்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. மாடு, ஆடு, மற்றும் தேனீ வளர்ப்பது என பல திட்டங்கள் உள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் இவர்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இம்மாதிரியான திட்டங்களுக்கு ஒரு குழு அமைத்து அதன் மூலம் ஒரு தோட்டம் அமைத்தால், தோட்டக்கலைத்துறையின் மூலம் ரூ.5 லட்சம் நிதி உதவி கிடைக்கும். 

ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய பாடுபட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும், மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க வேண்டும். தமிழக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

எனவே, பழங்குடியின மக்கள் அனைத்து உதவிகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாவட்டத்தில் சுற்றுசூழலை மேம்படுத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். மேலும், பழங்குடியினர்  கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள குறைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்து தருவேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், காவல்துறை கண்காணிப்பாளர் திமுரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்திராமு, வன அலுவலர்கள் ராஜ்குமார், திலீப், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...