தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம் - எம்.பி. கனிமொழி வேண்டுகோள்

அனைத்து சிறப்பு காவல்படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும்,  நாளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 19 சிறப்பு காவல்படைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். 

இந்த நிலையில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் விடுத்துள்ள இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உயிரிழந்து விட்டதாகவும், இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதிகளவில் இந்த செய்தியும் பகிரப்பட்டது.

இந்த தகவல்கள் கசியத் தொடங்கிய சில மணி நிமிடங்களிலேயே கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி, தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...