கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 நாட்களுக்கு ஓருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. ஆனால், கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தினை முற்றுகையிட்டு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலையில், இந்த முறை 20 நாட்கள் கடந்தும் குடிநீர் வழங்கப்பட வில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குழாய்களில் பாதிப்பு இருந்தால் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும், அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். கிழக்கு மண்டல அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சீரான குடிநீர் கேட்டு போராட்டம் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.