அக்டோபர் 3 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்- மாவட்ட தேர்தல் அலுவலர்

கோவை மாவட்டத்தில் வரும் அக்டோபர் 3ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து, 01.01.2018 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 03.10.2017 முதல் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

2018 ஜனவரி 1 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.

அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கிராம சபா, குடியிருப்போர் நல சங்க கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அறிந்துகொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அக்டோபர் 8 மற்றும் 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

2017 அக்டோபர் 31 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2018 ஜனவரி 5 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமாகிய ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...