கோவையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கோவையில் இருந்து மேலும் ஒரு புதிய விமான சேவையை அறிவித்திருந்தது.
அதாவது, கோவையில் இருந்து பெங்களூரூவுக்கும், பெங்களூரூவில் இருந்து கோவைக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.
அதோடு, ஐதராபாத், கொல்கத்தா, விஜயவவாடா, மும்பை, புனே, மங்களூர், டெல்லி போன்ற நகரங்களின் இணைப்பு விமானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான பயண விபரம்: கோவையில் புறப்படும் நேரம் மாலை 04.05 - பெங்களூரூவுக்கு சென்றடையும் நேரம் மாலை 05.05. இதேபோல, பெங்களூரூவிலிருந்து புறப்படும் நேரம் மாலை 02.50 - கோவைக்கு சென்றடையும் நேரம் மாலை 03.45.
புதிய சேவையின் தொடக்க சலுகை விலையாக (ஒரு முறை செல்வதற்கு மட்டும்) ரூ.1949 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை மற்றும் மங்களூரூ இடையே அக்டோபர் 4-ம் தேதி முதல் புதிய விமான சேவையையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கிறது.