கோவையில் வரும் அக்.,1 -ம் தேதி 13,000 பேர் பங்கேற்கும் மாபெரும் மாரத்தான் போட்டி - வெற்றியாளர்களுக்கான பதக்கங்கள், டீசர்ட் இன்று அறிமுகம்


கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு இந்த மாரத்தான் நிகழ்வை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் இந்நகருக்கு கொண்டு வருகிறது. 

இந்நிகழ்வில் பங்கேற்க 13,500-க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்து ஒரு புதிய உயரத்தை எட்டியிருப்பதால் இந்நிகழ்வின் 5-வது பதிப்பு பெருமை கொள்வதற்கு காரணம் இருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறவிருக்கின்ற மாரத்தான் ரேஸ் தினத்தன்று வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு வழங்கப்படவுள்ள மெடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீ-சர்ட் இன்று அமைப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.



1991-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதியன்று நிறுவப்பட்டு, இப்போது 26 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் சிசிஎஃப் கோயம்புத்தூரிலுள்ள ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் வார்டுகளிலிருந்து செயல்பட்டு வருகிறது. இத்தகைய மாரத்தான் நிகழ்வுகளின் வழியாக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை சிசிஎஃப் அதிகரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி, வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் கவனிப்பு மற்றும் வலித்தணிப்பு சேவைகள் துறையில், இறக்கும் தருவாயிலுள்ள நோயாளிகளுக்கு இல்லத்திலேயே பராமரிப்பு சேவையையும் மற்றும் சிகிச்சை அமைவிட வசதியையும் அளிக்கிறது. 



தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரம் மற்றும் ஆதரவோடு வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு நடைபெறுகிறது. 21.1கிமீ ஓட்டம் (பாதி மாரத்தான்), 10கிமீ ஓட்டம் மற்றும் 5கிமீ ஓட்டம், நடை என்ற மூன்று பிரிவுகளாக இந்த மாரத்தான் நடைபெறுகிறது.



ரூ.2.5 லட்சம் என்ற தொகைக்கும் அதிகமான ரொக்கப்பரிசுத்தொகையானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும்.  மாரத்தான் நிகழ்வு நடைபெறுகின்ற வழித்தடமானது, உதவி மையங்கள், நீர்வழங்கல் முனைகள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், வழித்தட குறிப்பான்கள், நிகழ்வை நெறிப்படுத்தும் மார்ஷல்கள், ஓட்டங்கள் நிறைவடைகின்ற பகுதியில் சிற்றுண்டிகள் என பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும். 



 

இந்த மாரத்தான் ரேஸ் இயக்குநரான ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில், வாழ்க்கையின் அனைத்து நிலைகளைச்சேர்ந்த மக்களை ஒன்றுசேர்த்து, ஒரு உன்னத நோக்கத்திற்காக ஒரு விளையாட்டுத்தளத்தில் ஒருங்கிணைக்கக்கூடிய இதுபோன்ற நிகழ்வு கோயம்புத்தூரில் எதுவுமில்லை. பங்கேற்பாளர்களுக்கு முந்தைய ஆண்டைவிட செயல்திறனையும் மற்றும் ஓட்ட அனுபவத்தையும் மேம்படுத்துவதும், பிற ஓட்டப்பந்த நிகழ்வுகளுக்கு பின்பற்றுவதற்காக அல்லது மாதிரியாக கொண்டிருப்பதற்காக தரஅளவுகளை நிர்ணயிப்பதும் எமது நோக்கமாகும். கோயம்புத்தூர் மாநகருக்கு உலகத்தரத்திலான ஒரு விளையாட்டு நிகழ்வை தொடர்ந்து வழங்குவதும் எமது குறிக்கோளாகும். இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...