ஆக்கிரமிப்புகளால் நிறையும் கோயம்புத்தூர் வாய்க்கால்- வெள்ள அபாயத்தில் குடியிருப்பு வாசிகள்

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் நகரின் பிரதான ஏரிகளுக்கும் குளங்களுக்கும் வாய்க்கால்கள் வழியாக நீர் அதிகப்படியாக வந்து சேர்ந்தது. அதே நேரத்தில் வாய்க்கால்களை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் ஆற்று நீர் புகுந்து மக்களின் உடமைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறான மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று பெரியகுளம் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதி. பெரியகுளத்திற்கு நீர் வரும் வழித்தடமான கோயம்புத்தூர் வாய்க்காலை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் மழைக்காலங்களில் தனித் தீவுகளைப்போல் தத்தளிக்கின்றன. ப்ளாஸ்டிக் குப்பைகளாலும், கட்டிட கழிவுகளாலும், தனியார் ஆக்கிரமிப்புகளாலும், தூர்வாரப்படாத நிலையில் இருக்கும் இந்த வாய்க்காலில் நீர் ஓடுவதற்கு வழியே இல்லாமல் ஆங்காங்கே தேங்கி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடுகிறது.



இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:- "நொய்யல் ஆற்றிலிருந்து வாய்க்கால் பிரிந்து கோயம்புத்தூர் அணை வழியாக கோயம்புத்தூர் வாய்க்காலுக்கு நீர் வருகிறது. 2 மீட்டர் உயரம், 4 அடி அகலம் கொண்ட 4 ஷட்டர்கள் அணையில் உள்ளன. கடந்த வார மழைக்காக வெறும் 2 இன்ச் அளவிற்கு மட்டுமே அவைகள் திறக்கப்பட்டன. வாய்க்காலில் உருவாகியுள்ள ஆக்கிரமிப்புகளால் அந்த நீர் கூட முழுமையாக குளத்தை சென்றடையவில்லை



இனிவரும் மழைக்காலங்களில் அணையின் ஷட்டர் அதிக அளவில் திறக்கப்பட்டால், நீர் போக வழியின்றி வாய்க்காலில் தேங்கி, பெரும் வெள்ளமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடும்" என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

"மேலும், புட்டிவிக்கி பாலம் அருகே அமைந்துள்ள இந்த வாய்க்காலின் பாதைக்கு மிகநெருக்கமாக சாலைகள் அமைத்து தனியார் அடுக்குமாடி கட்டிடப் பணிகள் நடந்துவருகிறது. சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளால் வாய்க்காலை தூர்வாருவது கடும் சிக்கலாகிறது. வேறுவழியில்லாமல் சில தடுப்புகளை தற்காலிகமாக அகற்றி தூர்வாரும் பணி நடந்தது" என்றார்.



இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "அந்த சாலையும், தடுப்புகளும் மாநகராட்சியால் அமைக்கப்பட்டது" என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளோ, "தூர்வாரும் பணி மட்டுமே தாங்கள் மேற்கொண்டோம். வாய்க்காலை ஒட்டிய சாலையும் தடுப்புகளும் தாங்களால் அமைக்கப்படவில்லை. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமே விசாரிக்க வேண்டும்" என்று பதிலளித்தனர்.



நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், பொறுப்பிலும் உள்ள அதிகாரிகளே இவ்வாறு மாறி மாறி பதிலளிப்பதைத் தவிர்த்து நீர் நிலைகளின் நாளங்களாக செயல்படும் வாய்க்கால்கள் நசுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அழியும் தருவாயில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...