பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்- திமுக சட்டமன்ற உறுப்பினர்

சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், அத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 960 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்று இடம் வழங்காமல் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...