கோவை மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யலில் நுரை பொங்கியதா? உண்மையான காரணம் என்ன ?

கடந்த வாரம் பெய்த மழை வறண்டு கிடந்த அணைகளையும், ஆறுகளையும் நிறைத்ததன் மூலம் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்த மக்கள் மனதில் பாலை வார்த்தது.

கொஞ்சம் கொஞ்சமாக கூவம் ஆறு போல மாறிவந்த நொய்யலை கழுவி எடுதாற்போல சுத்தம் செய்தது மழை. கழிவு, கசடுகள் அனைத்தையும் அகற்றி ஆர்ப்பரித்து ஓடிய நொய்யலால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 

அதே நேரத்தில், நொய்யல் ஆற்றில் வெண்ணிற நுரை ததும்ப மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர். சாயக்கழிவுகள் கலந்ததாலேயே நொய்யலில் இப்படியான நுரை பொங்கி வழிகிறது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்ட, கோவை மாவட்ட மக்கள் சோப்பு போட்டு குளிப்பதாலேயே நொய்யலில் நுரை பொங்குகிறது என்ற தொலை நோக்கு சிந்தனை கொண்ட கருத்தை கூறியுள்ளார் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர்.

கடந்த வாரம் திருப்பூர் மாவட்ட சாய சலவைப்பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்று அலோசனை நடத்தினர். 

அப்போது பேசிய அமைச்சர் கருப்பண்ணன், 'நொய்யல் ஆற்றில் கடந்த வாரம் ஆற்று நீர் நுரையுடன் சென்றதற்கு சாய சலவைப்பட்டறை நீர் காரணமல்ல. நொய்யல் ஆற்றில் சாக்கடை நீர்கலக்கிறது. கோவை வழியே வரும் நொய்யலில், அங்கு வாழும் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் இதில் கலக்கிறது. இதன் காரணமாகவே நுரை ஏற்பட்டுள்ளது' என்றார். சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தெர்மாகோல் திட்டத்தை மிஞ்சும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவித்தாக, கருப்பண்ணனை நெட்டிசன்கள் தாளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமிலத்தன்மை வாய்ந்த சாயக்கழிவுகள் ஆற்றில் கலக்கும் போதே இவ்வாறு அதிகப்படியான நுரை ஏற்படும் என்று சமூக ஆர்வலரான மணிகண்டன் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக அவர் நமது சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- 

"கோவை ஆத்துப்பாலம் அருகே சாயக்கழிவுகள் மற்றும் பிளீச்சிங் நீர் ஆற்றில் கலப்பதால் நுரை பொங்குவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தேன். ஆனால், கோவை மாநகர பகுதியில் எங்குமே சாயக்கழிவு ஆலைகள் இல்லை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. ஆனால், புட்டுவிக்கி பாலத்தின் அருகிலேயே 5-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

கோவை மாநகரில் உள்ள குளங்களில் பெரும்பாலான கழிவு நீர்  சேகரிக்கப்பட்டுவிடுகிறது. இந்த நிலையில், அந்த நீர் திருப்பூர் வரை செல்வதும், அதிலிருந்து நுரை ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரே கூறியிருப்பது ஏற்கமுடியாத ஒன்று. 

அளவுக்கு அதிகமான மழை காரணத்தினாலேயே நொய்யலில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அந்த நேரத்தில் மனிதர்கள் உபயோகிக்கும் சோப்பு நீரால் நுரை பொங்கியிருக்க வாய்ப்பில்லை. 

ஆற்றில் கலக்கும் பீளீச்சிங் கழிவுகளில் அமிலத்தன்மை இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் சோதனை செய்துவிட்டு அதிகாரிகள் இப்படி பேசுவது புரிகிறது. ஆற்றில் கலக்கும் பீளீச்சிங் கழிவுகளில் அமிலத்தன்மை உள்ளது என்பதை அதிகாரிகள் எங்களோடு வந்து ஆய்வு செய்து காட்டினால் தெரிய வைப்போம்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...