ரத்தநாளத்தில் தையல் போடுதல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை குறித்து கே.எம்.சி.ஹெச்சில் பயிலரங்கம்

கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என கே.எம்.சி.ஹெச். (KMCH) கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன்படி, 4-வது பயிற்சி வகுப்பு மற்றும் பயிலரங்கு இன்று (23.09.2017) முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.



பயிலரங்கம் குறித்து கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் தலைவரும், பயிற்சியின் இயக்குனருமான விவேகானந்தன் கூறுகையில், இரத்த நாளங்களை சேர்த்தல் மற்றும் கல்லீரலை அறுவை சிகிச்சையில் உள்ள நுணுக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு அறுவை சிகிச்சை நிபுணருக்கும் ஒரு பலவீனமாகவே இருந்து வருகிறது. ஆகவே, அவர்களுக்கு தங்களால் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில் நுணுக்கங்களை ஆர்வமுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிலரங்கமானது, ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணர்களையும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தமது துறையாக மேற்கொள்ள நினைப்பவர்களையும் மனதில் கொண்டு நடத்தப்படுகிறது. விலங்கு திசுக்களின் நுணுக்கங்கள் மூலம் இந்த பயிற்சியில் பங்கு கொள்வோருக்கு கற்பிக்கப்படும். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நிபுணர்கள் பங்கு கொள்வோருக்கு வழி காட்டுவார்கள்.

முதுகலை பட்டதாரிகளுக்கும் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சையில் ஆர்வம் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் இந்த பயிலரங்கம் மிகவும் ஏற்றது. பயிற்சியை முடித்தவர்களுக்கு எத்திகான் (Ethicon) நிறுவனத்தின் சான்று வழங்கப்படுகிறது. 

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் துணை தலைவர் பழனிசுவாமி பேசுகையில், கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் குழுவில் உள்ள விவேகானந்தன், ராஜீவ் சின்ஹா மற்றும் சோரப் கபூர் ஆகியோரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இப்படி ஒருமேடை அமைத்து கொடுத்ததற்கு பாராட்டுகிறேன். இது போன்ற பயிலரங்குகளையும், மருத்துவ கூட்டங்களையும் நடத்துவதன் மூலம் வளர்ந்துவரும் நிபுணர்களுக்கு பல நுட்பமான சிகிச்சை முறைகளை கற்றுத்தர கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையம் முனைப்பாக செயல்படுவது தனக்கு பெருமிதமாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...