சிறப்பாசிரியர் தேர்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் செல்போன் திருட்டு


கோவை  ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் இன்று (23.09.2017)  பகுதி நேர ஆசிரியர்களுக்கான சிறப்பாசிரியர் தேர்வு நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் பள்ளி மையத்தில் நடந்த இத்தேர்வில் 50-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன்களை அருகில் உள்ள ஓரு அறையில் வைக்கும்படி பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்விற்கு வந்தவர்கள் செல்ப்போன்களை பள்ளியின் ஓரு அறையில் வைத்து இருந்தனர். தேர்வு முடிந்த பின்னர் செல்போன்களை எடுப்பதற்காக ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அப்போது,  ராஜேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 4  பகுதி நேர ஆசிரியர்களின் செல்போன்கள் மட்டும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்போன் திருட்டு போனது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டடனர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

செல்போன் திருடு போனதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் என்றும், செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...