கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 91-வது வார்டு கோவைபுதூர் பிரிவு, மேற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து இன்று (22.09.2017) தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 86-வது வார்டு கரும்புக்கடை, பொன்விழா நகர் பகுதியில் ரூ.72 லட்சம் செலவில் நகர்நல மையம் அமைக்கும் பணியையும், 92-வது வார்டு விஜயலட்சுமி மில்ஸ் பகுதியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நிழற்குடை அமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், துணை ஆணையாளர் காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.