அவினாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் துணைத்தலைவர் ஜேம்ஸ் ராமு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக கார் மூலம் கோவை விமான நிலையம் வந்து கொண்டிருந்தார். அவரை வழி  அனுப்பி வைப்பதற்காக கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கந்தசாமி உள்பட 4 பேர் உடன் சென்று கொண்டிருந்தனர். 



அவர்கள் வந்த கார், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து (TN 33 N 2902), காரின் மீது வேகமாக மோதியது. இதில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கந்தசாமி, ஜேம்ஸ் ராமு, கதிர்வேல் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநருக்கு அவினாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் கந்தசாமி, ஜேம்ஸ் ராமு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் கூடிய தெக்களூர் பகுதி மக்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், வேகத்தடை மற்றும் அபாய பாதாகைகளை அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என போலீஸாரிடம் அவர்கள் முறையிட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.



Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...