நீட் தேர்வை எதிர்த்தும், அனிதா மரணத்திற்கான நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறித்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சிவானந்தா காலனி பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் கூறுகையில், ’'நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற கோரியும் நாங்கள் இந்த போராத்தை நடத்தி வருகிறோம். கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களின் போராட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்’' இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.