நீலகிரியில் நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வேளாண் பொறியியல்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் காட்டேரி நீர்பிடிப்பு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பணிகளையும், கேத்தி பகுதிக்குட்பட்ட கெக்கட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நீர்சேகரிப்பு கட்டிடம் கட்டப்பட்டது. 

இதேபோல, அதிகரட்டி, கொலாணிமட்டம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும், செல்வி நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்தன.இதன் மூலம் விவசாய பெருங்குடி மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் பொறியில் துறை சார்பில் மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது, பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 



பழங்குடியின கிராமமான உலிக்கல் பேரூராட்சி ஆனைப்பள்ளம் மற்றும் சின்னாளக்கொம்பை பகுதி பழங்குடியின மக்களின் முக்கிய தேவைகளான சாலைவசதி, பகுதிநேர நியாய விலைக்கடை, தண்ணீர் வசதி, வீட்டுமனைப்பட்டா, பழுதடைந்த வீடுகள் ஆகியவற்றை விரைவில் சரி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதியளித்தார். மேலும், பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். 

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) பிரபு, உதவி பொறியாளர் பூபாலன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...