போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 வது ஊதிய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், போராட்டம் தொடர்பாக தமிழக அரசு விளக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (21.09.2017) விசாரணைக்கு வந்த போது தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். பிற்பகலில் வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிபதிகள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்திற்கான சம்பளத்தையும் பிடித்தம் செய்யக் கூடாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.  7 வது ஊதிய கமிஷன் பரிந்துரை அமல்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி அக்டோபர் 13 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 7 வது ஊதிய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கால தாமதமானால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை முன்நிறுத்தி போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...