2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அக்.,25-ல் தீர்ப்பு

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி ஸ்பெக்டரம் உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ.,யால் வழக்கு தொடரப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளிகளாக திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளையும், அமலாக்கத்துறை தொடர்ந்த ஒரு வழக்கையும், நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையிலான, தில்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசா, அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக கடந்த 2011ல் சி.பி.ஐ., முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. 2008ம் ஆண்டு முதல் நடந்து வரும் இவ்வழக்கில் இறுதிக்கட்ட வாதம் நிறைவடைந்துள்ளது.  

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஓ.பி.சைனி இன்று(20.09.2017) அறிவித்தார். இதில், 2ஜி வழக்கில் தீர்ப்பு தயாராக கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், வரும் அக்டோபர் 25 ம் தேதிக்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...