கோவையில் அக்.,5-ம் தேதி அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியில் திறனாய்வுப் போட்டி

கடந்த 2016-2017 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, இளைஞர்கள் தொழில்திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இப்போட்டிகளை நடத்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அரசாணையை வெளியிட்டது.

இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் இத்திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு மாநில அளவில் கலந்து கொள்வதற்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும். அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் வரும் அக்டோபர் 5-ம் தேதி காலை 11.00 மணியளவில் திறனாய்வு போட்டிகள் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியில் (GCT) நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் கீழ்காணும் வகைகளில் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பித்து பங்கேற்கலாம்.

பொறியியல் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்ப கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள்/ கலை மற்றும் அறிவியில் கல்லூரிகள்/ தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர்களாக பயிற்சி பெறுவோர்.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்

குறுகிய கால பயிற்சிகள் மூலம் திறன் பெற்றோர் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்ற திறனுடையோர்

இப்போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெறுவோருக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், இவர்கள் மாநில அளவில் வர்த்தக மையம் நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர் ஆவர். இப்போட்டிகளைப் பார்வையிட தமிழகத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தர உள்ளனர். 

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள்/ தொழிற்சாலை பணியாளர்கள்/ தொழிற்பழகுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் நல்ல வேலை வாய்ப்பினை பெறலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.skilltraining.tn.gov.in. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 03.10.2017.

மேலும் விபரங்களுக்கு துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை-29. தொலைபேசி எண்: 0422-2642041

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...