மதவெறி படுகொலைகளைக் கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் கோவையில் கருத்தரங்கு



மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மதவெறி படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கம் கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்காளர்கள் படுகொலை அதிகரித்து இருப்பதாகவும், மக்களிடையே மத துவேஷத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் சிபிஐ எம்.எல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வீ.சங்கர் குற்றம்சாட்டினார்.

மேலும், கவுரி லங்கேஷ் சங்பரிவார் அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், மதச்சார்பின்மை கொள்கை மற்றும் லிங்காயத்துகள் இந்து மதத்தில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்ததற்காக அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...