கோவையில் மாயமான மாணவிகள் கோழிக்கோட்டில் பத்திரமாக மீட்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் நேற்று(15.09.2017) காலை மாயமாகினர். இதனையறிந்து பதறிப் போன சிறுமிகளின் பெற்றோர்கள், இரண்டு சிறுமிகளும் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சிறுமிகளை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது பள்ளியை புறக்கணித்து எங்கேயாவது சென்றுள்ளனரா? என்ற கோணங்களில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மாணவிகள் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அமிர்தா வித்யாலயா பள்ளியில் இருந்து மாயமான குழந்தைகளா என்பதை முதலில் உறுதி செய்தனர். பின்னர், மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...