கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அரசு ஊழியர்கள் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவையில் நடைபெற்று வரும் ஜேக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.



கோவையில், நேற்று (செப்டம்பர் 14) 7-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நாமம் இட்டு பிச்சை எடுக்கும் வகையில் வேடமிட்டும் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சமையல் செய்து உணவருந்திவிட்டு அங்கேயே தங்கியதுடன், நடனமாடி சக ஊழியர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டை இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் ஊழியர்களை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...