நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கைகோர்த்த ஜேக்டோ- ஜியோ அமைப்பினர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவல் பணிகள், பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தங்களது ஊதிய பிரச்சனை மட்டுமின்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும், உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நீதிகோரியும் ஜேக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் இணைந்து இன்று 7-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில், குடையுடனும், பிச்சை எடுக்கும் வகையில் நாமத்துடனும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.



இதனிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், விடுப்பில் செல்லக்கூடாது என்றும் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதையும் மீறி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது தற்காலிக வேலை நீக்கம் செய்யக்கூடிய 17-பி நோட்டீசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்க நோட்டீசை தபால் மூலமாகவும், நேரிலும் வழங்கி வருகிறார்கள்.

கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக்க நோட்டீசை தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் வினியோகித்து வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...