அரசியல் களத்தில் கமல்..! விரைவில் உதயமாகிறதா புதிய கட்சி..?

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது டிவிட்டுகள் பலவும் கூட அரசியலுக்கு வருவதை உறுதிசெய்வதாகவே உள்ளன.

கடந்த சில காலமாக நடிகர் கமல்ஹாசன் அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆளும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், சில அரசியல் கட்சியினரை நேரடியாகவே தாக்கி டிவிட்டிலும் தனது கருத்தினை பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தான் அரசியல் களத்தில் ஏற்கனவே நுழைந்து விட்டேன் என பதிவு வெளியிட்டிருந்தார். சமூக வளைதலங்களிலும் இது பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

தனது ஆரம்பகாலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்பட்டு வரும் கமல், எந்த கட்சியில் இணைந்து செயல்படுவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், 'பினராய் விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன்' என்று கூறினார். இது கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாக உள்ளதாக பேசப்பட்டது. மேலும், அவர் கம்யூனிஸ்ட் அமைப்புடன் இணைந்து செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது, அவர் புதிய கட்சியினை விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலிற்கு முன்பு தனது கட்சியினை கமல் அறிமுகம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...