நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்


ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும். 5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலம். ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா?.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய அமைப்பினர் ஒன்றும் சுப்ரீம் பவர் இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் போராட்டம் நடத்தலாமா?. போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்.,18 ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...