பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற்று, தொழில் துவங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி) கீழ் 2017-18-ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்ட நிதி இலக்கில் கடன் பெற்று, தொழில் துவங்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக நிதி உதவியினைப் பெற்று புதிதாக தொழில் தொடங்க ஆர்வமிக்க தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி அடிப்படையிலான தொழில்களை அதிகபட்சம் ரூ.25 லட்சம் முதலீட்டிலும், சேவை அடிப்படையிலான தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும், உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. இவற்றுக்கு மேற்பட்ட திட்ட அளவிற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதில், நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுப்பிரிவு மனுதாரர்களுக்கு 15 சதவிகித மானியமும், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுப்பிரிவு மனுதாரர்களுக்கு 25 சதவிகித மானியமும் அளிக்கப்படும். பட்டியலிடப்பட்ட இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், ஊனமுற்றோர் போன்ற சிறப்புப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவிகித மானியமும், கிராமப்புறத்தில தொடங்கினால் 35 சதவிகித மானியமும் வழங்கப்படும். தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினர், திட்ட மதிப்பில் 10 சதவிகிதம் முதலீடு செய்யவேண்டும். சிறப்புப்பிரிவினர் 5 சதவிகிதம் முதலீடு செய்யவேண்டும். மீதமுள்ள முதலீட்டுத்தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். 

இத்திட்டத்தின் கீழ் தென்னை நார் கழிவுக் கட்டிகள், மசாலா பவுடர், காலணி, உணவு எண்ணெய், அட்டை பெட்டிகள், ஆயத்த ஆடை, சாக்லேட், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், சி.என்.சி. லேத், ஷீட் மெட்டல் பேப்ரிகேசன், பிளாஸ்டிக் இன்ஜக்ஷன் மோல்டிங், பெட் பாட்டில், பெயிண்ட், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பி.வி.சி பைப், பிவிசி கதவு மற்றும் ஜன்னல்கள், செல்லோ டேப், தோல் பொருட்கள் போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்ட சேவைத் தொழில்களும் இத்திட்டத்தின் கீழ் மூலம் துவங்கலாம்.

உரிய ஆவணங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட தொழில் மையம் (0422-2391678, 9443113825, 9442223823, 8870066684), காதி கிராமத் தொழில்கள் ஆணையம் (0422-230005) மற்றும் காதி கிராமத் தொழில்கள் வாரியம் (0422-2562346) ஆகிய அலுவலகங்களில் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மாவட்ட தேர்வுக்குழு மூலம் பயனாளிகள் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விண்ணங்கள் வங்கிகளுக்கு அனுப்படும். அதன் பின்னர் வங்கிகளின் நெறிமுறைகளின்படி சேவைப்பகுதி வங்கியின் மூலமாக கடன் ஒப்புதல் வழங்கப்படும். மேலாண் பயிற்சி முடிந்து, தொழில் முனைவோர்கட்கு கடன்களும் அவற்றைத் தொடர்ந்து மானியமும் வழங்கப்படும். 

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...