நீட் தேர்வுக்கு எதிராக கோவையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்குப் பின் நடத்தப்பட்டது. 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன.



இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

தொடர்ந்து, நீட் தேர்விற்கு எதிராக அனிதா போராடி வந்த நிலையில் தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகள் பரிக்கப்பட்டதன் விரக்தியினாலும் செப்டம்பர் 1ம் தேதியன்று மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தார்.



இதனால், ஆவேசமடைந்த தமிழக மக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசியல் அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் கோவையில் இன்று இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், 'எங்கள் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அதன்காரணமாகவே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றோம். மேலும், அரசு இந்த போக்கை கடைபிடித்தால் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும்' என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...