ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 10) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று விவசாயிகளுக்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.

தற்பொழுது ஒரு போக விவசாயத்திற்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையினை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 10) முதல் பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு 08.01.2018 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க.அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆழியாறு, கோட்டூர், ஆணைமலை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகளின் விவசாய பயன்பாட்டிற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பயனடையுமாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நீராபானம் விற்பனை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து நீராபானம் விற்பனையானது நடைமுறையில் உள்ளது. விவசாயிகளுக்கு வண்டல் வழங்குவதற்காக அனைத்து ஏரி, குளங்களிலும் தூர்வாரும் பணி கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நல்ல சத்துடன் கூடிய வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைப்பதுடன் மட்டுமல்லாமல் அனைத்துக்குளங்களும் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

அன்னூர், அத்திகடவு அவிநாசி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. மேலும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்திட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, பொதுப்பணித்துறை நிர்வாக ஆதாரம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் நரேந்திரன், கருணாகரன், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் பாசன சங்க செயலாளர் பட்டீஸ்வரன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...