வாலாங்குளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்த நகராட்சி நிர்வாகம்


கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால் நகர் முழுவதும் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் நீர் வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மழை காலங்களில் நகரின் மையப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், புறநகர் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு சென்று சேர முடியாததே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலர், உக்கடம் - சுங்கம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் அருகே வாலாங்குளத்தில், செயற்கையாக மணல் திட்டுக்களை அமைத்தது தெரிய வந்தது. குளத்தின் மேற்கு பகுதியில், நீர் வரும் இடத்தில் 50-க்கும் மேற்பட்ட மணல் திட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 



வாலாங்குளத்தில் மீன்பிடிக்க வரும் மீனவர்கள், மீன்களை கழுவுவதற்கு ஏதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வாலாங்குளத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து நமது சிம்பிளிசிட்டி (SimpliCity) செய்தி வெளியிட்டது. இதையறிந்த நகராட்சி ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான கே.விஜயகார்த்திகேயன், வாலாங்குளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 



இதையடுத்து, நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மீனவர்களின் உதவியுடன் மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தினர். இதனால், குளத்திற்கு செல்லும் மழை நீர் தடையின்றி சென்றது. 



மேலும், குளத்திற்கு மழை நீர் செல்வதை, தடுக்கும் பொருட்டு செயல்படும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். 

நீண்ட நாட்களாக கண்டுகொள்ளப்படாத நிலையில் கிடந்த இந்தப் பிரச்சனையை, நகராட்சி அதிகாரிகளால் சீர் செய்ய உறுதுணையாக இருந்த சிம்பிளிசிட்டியின் (SimpliCity) செய்தி நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...