வெள்ளலூர் குளத்தில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை ராமநாதபுரம் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது தந்தை வெள்ளலூர் கக்கன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷின் மகன் தினேஷ் தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தான். 

இன்று (09.09.2017) காலை வெள்ளலூர் குளத்தில் குளிப்பதற்காக தினேஷ் சென்றுள்ளான். கடந்த சில தினங்களாக கோவையில் பெய்து வரும் பலத்த மழையால், வெள்ளலூர் குளத்தின் கரைப் பகுதிகள் சேறும், சகதியுமாய் இருந்தன. 

இந்நிலையில், கரையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் தினேஷ், கால் தவறி குளத்தில் விழுந்தார். இதையறிந்து. அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள், சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...