கோவையில் புளூ வேல் விளையாடிய பள்ளி மாணவர்: கவுன்சிலிங் கொடுக்கும் போலீசார்

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் 50 சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவாலை செய்பவர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே, விளையாடுபவர்களை பற்றிய முழுமையான தகவல்களை விளையாட்டு நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.

50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யாவிட்டால் அவர்களைப் பற்றிய ரகசியம் வெளியிடப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். இதற்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த விளையாட்டின் மூலம் இந்தியாவில் தற்கொலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, ‘புளூவேல்’ விளையாட்டுகளால் மாணவ, மாணவிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் போலீஸார் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். மேலும், இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற உதவி எண்ணை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன ஒரு பகுதியாக, கோவையில் புளூவேல் விளையாட்டை  விளையாடிய பள்ளி மாணவர் ஒருவருக்கு போலீசார் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர் அன்னூரை அடுத்த மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவர், கடந்த சில தினங்களுக்கு முன் புளுவேல் விளையாட்டினை விளையாட தொடங்கியதாக தெரிகிறது.

பள்ளி மாணவர் இந்த விளையாட்டு செயலியை அறிந்த அன்னூர் போலீசார், அந்த மாணவர் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு அறிவுரை கூறி பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.  தொடர்ந்து, புளூ வேல் விளையாட்டை இனி விளையாட வேண்டாம் என்றும் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...