கோவையில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த இரண்டு,மூன்று தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.  

இதனால், கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார்.

அப்போது, பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கோபிநாத் வாகனத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கோபிநாத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பாலத்தில் இருந்து 100 மீ. தொலைவில் கோபிநாத்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 

35 வயதான கோபிநாத் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்கும் பணி செய்து வந்தார். அவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும், கவுதம், பூங்கொடி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...