சோமனூரில் பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலி


கோவை மாவட்டம் சூலூர் அருகே சோமனூரில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில், பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. 



இந்த விபத்தில், பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  மேலும், 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு காவல் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4லட்சம்நிதியுதவி. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ; காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...