மேட்டுப்பாளையம் - சத்தி - பவானி வரையிலான சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும் - முதலமைச்சர்

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (6.9.2017) ஈரோட்டில்  எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா  நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேலும், நிகழ்ச்சியில், எம்.பி., எம்.எல்.ஏ,.க்கள் மற்றும் அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், அறியாமையாலும், பகுத்தறிவு இன்மையாலும் இருண்டு கிடந்த தமிழ் மண்ணிற்கு வெளிச்சம் தர வெளி வந்த பகலவன் தந்தை பெரியார் தோன்றியது இந்த ஈரோடு மண்ணில்தான். அதனால்தான் அன்றிலிருந்து இன்று வரை கொங்கு மண்டலத்தின் மையப் புள்ளியாக விளங்கும் இந்த ஈரோடு, திராவிட இயக்கத்தின் வேராக விளங்கி வருகிறது.



இந்த ஈரோடு திராவிட இயக்க வரலாற்றில் முதல் மூன்று அத்தியாயங்களாகத் திகழ்ந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய மாவட்டமாக திகழ்ந்திருக்கிறது. இதைத்தவிர பல்வேறு சிறப்புகளைப் பெற்றது இந்த மாவட்டம். 

தீரன் சின்னமலை, நதிகள் இணைப்புக்கு முன்னோடியாக  திகழ்ந்த காளிங்கராயன், மாபெரும் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், பாடகி கே.பி. சுந்தராம்பாள் போன்ற தலைசிறந்தோர் பிறந்தது ஈரோடு மாவட்டத்தில்தான்.  இவ்வாறு  அவர் கூறினார்.  



இதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி விளக்கி, தனது உரையை நிறைவு செய்தார். 

இறுதியில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

•  தற்போது பூனாட்சி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அந்தியூர், கோனேரிப்பட்டி மற்றும் சென்னம்பட்டி 110 கிலோ வோல்ட் துணை மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பூனாட்சியில் அமைந்துள்ள  ஸ்பேக் குச்சி கிழங்கு மில் அருகில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பொருட்டும் மற்றும் பெருகி வரும் மின் பளுவை கருத்தில் கொண்டும், பூனாட்சி கிராமத்தில் உள்ள 1.22 ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய 110/22 கி.வோ. துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

• ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கய்யநாயக்கர் கல்லூரியானது இந்த மாவட்டத்திலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட மிகப் பழமையான கல்லூரியாகும். இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.



• ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு வரையிலான சாலையில் கி.மீ 4/6 முதல் கி.மீ 8/2 வரை உள்ள சாலையை மையத்தடுப்புடன் கூடிய நான்கு வழிப் பாதையாக அகலப்படுத்தப்படும்.

•ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு மாநகராட்சி, நான்கு  நகராட்சி மற்றும் 42 பேரூராட்சி பகுதிகளில் 2015-2016 முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 7500 வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்படும்.

• அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேந்த பட்லூர் மாத்தூர் ஊராட்சிகளுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளாந்தியூர் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பாட்டில் இருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அபிவிருத்தி செய்து மேற்படி ஊராட்சி பகுதியிலுள்ள 58 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.



• பவானி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மயிலம்பாடி ஊராட்சி பயன் பெறும் வகையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள வரதநல்லூர் மற்றும் 53 ஊராட்சி குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அபிவிருத்தி செய்து மேற்படி ஊராட்சியை சேர்ந்த 54 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

• பர்கூர் மலையிலுள்ள மணியாச்சி பள்ளித்திலிருந்து தண்ணீரை புனல் வழியாக, அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு  கொண்டு வருவதற்கு முதற்கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

• அந்தியூர் நகரத்தில் போக்குவரத்து நலன் கருதியும் பொதுமக்களில் பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் அந்தியூர் பிரதான சாலையில் மைய தடுப்பு சுவர் அமைக்கப்படும்.

• மக்கள் அனைவரும் உரிய காலத்தில் உயர் சிகிச்சை பெற ஏதுவாக ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உயர் சிகிச்சை பிரிவு,  நிதியுவியுடன் அமைக்கப்படும்.

• ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழுள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்ற பரிசீலிக்கப்படும். 

• ஈரோட்டிலிருந்து அக்ரஹாரம் பவானி சாலை உள்ளிட தொப்பூர்- மேட்டூர்  - பவானி சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை அலகில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• பவானி நகரத்திற்கு 8.184 கி.மீ நீளத்திற்கு புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் நில எடுப்பிற்காகவும் ரூ.7.16 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  தற்போது நில ஆர்ஜிதம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. நில எடுப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் புறவழிச் சாலை அமைக்கப்படும்.

• அந்தியூர் - அம்மாப்பேட்டை சாலையில் 11 கிமீ நீளச் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

• கோபி முதல் சித்தோடு வரை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

• மேட்டுப்பாளையம் முதல் சத்தி வரையிலும், சத்தி முதல் அத்தானி வழியாக பவானி வரை உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். 

• பவானி-ஈரோடு-கரூர் சாலையினை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி மேம்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.



• ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பணப் பயிரான மஞ்சள், தற்போது கருமாண்டி செல்லிப்பாளையம், செம்மாம்பாளையம், ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் மறைமுக ஏல முறையின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த மறைமுக ஏல முறையினை நவீனப்படுத்தும் விதமாக, 8.3.2017 முதல் மின்னணு முறை வணிகத்திற்கான மென்பொருள், சோதனை அடிப்படையில் பெருந்துறை ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த மின்னணு முறை வணிகம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏல மையங்களையும் ஓரே மென்பொருளின் கீழ் ஒருங்கிணைத்து  ஒரே நேரத்தில் மின்னனு ஏல முறையை நடைமுறைப்படுத்தி, காலை 9 மணி முதல் 11.30 மணி வரை (மின்னணு ஏல காலம்) ஏலம் நடத்திட அரசு பரிசீலனை செய்யும்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...