அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஐந்தாவது நாளாக (நேற்று) தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யா வலியுறுத்தியும் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டமுத்தூர் தொகுதி தலைவர் பீர் முஹமது தலைமையில் குனியமுத்தூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தொண்டமுத்தூர் தொகுதி செயலாளர் ஷானவாஸ், எஸ்.டி.பி.ஐ கட்சி செயல்வீரர்கள் அன்சர் செரீப், அப்துல் ரஹிம், கரீம், முஸ்தபா, அஷ்ரப், அமீர் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், முற்றுகை போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.