பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து நடத்தும் உள் அரங்கு சைக்கிள் போட்டி

பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துகிறது. பல சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டி பெடல்பீட் மையத்தில் நடக்கிறது. சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.  



இந்திய அளவில் உள்அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துவதற்கான மையத்தை சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் பெடல்பீட் ஆகும். உள் அரங்கு சைக்கிள் போட்டியின் மூலம் இருதயம் சீராக இயங்க வழிவகை செய்கிறது.  பொறுமை, உடல்திறன். சீரான உடல்நிலை போன்ற ஆரோக்கியமான பயன்கள் உள்ளன. அதோடு, தற்போதைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் உடல் பருமனை குறைக்கவும் உள் அரங்கு சைக்கிள் போட்டிகள் உதவுகின்றன. 



ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியானது, இருவயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் போட்டிகள், 40 வயதுக்குட்பட்டோர், 40-வயதுக்கு மேற்பட்டோர் என நடக்கிறது. 

கடந்த முறை நடந்த போட்டியில், ஆண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சதீஷும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சுனில் என்பவரும் வெற்றி பெற்றனர். இதேபோல, பெண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் டோரிட்டி கோட்ஜி என்பவரும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சாந்தினி என்பவரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். 

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...