கோவையில் நேற்றிரவு முதல் விடியவிடிய கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழையால் கோவையில் பெருபாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில் உள்ள கோவை கூட்ஷெட் ரோட்டில் நேற்றிரவு 12 மணியளவில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த சாலையில் திடீரென ராட்சதப் பள்ளமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டிகள் யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை.

முன்னதாக, இப்பகுதியில் ஏற்கனவே சாலை விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பேரிகார்டுகளை மட்டும் அமைத்தது. தொடர்ந்து அந்த சாலையினை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, சாலையின் நடுவே பெரியளவிலான பள்ளம் உருவாகியுள்ளதால் மேலும் இது பெரிதாமல் இருக்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.