இண்டிகோ விமான நிறுவனம் ரூ.1000 மதிப்பில் உள்நாட்டு பயணத்திற்கான சலுகை விலை விமான டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு ரூ.1,174 மற்றும் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரூ.1,220-க்கும் விமான டிக்கெட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல, உள்நாட்டு பயணித்திற்கான பல்வேறு வழித்தடங்களை சலுகை விலை டிக்கெட்டுகள் இண்டிகோ விமான இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் பெறப்படும் விமான டிக்கெட்டுகளுக்கு 200 ரூபாய் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும் 8 சதவிகித கட்டண சலுகையை இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையினை இண்டிகோ விமான நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.