கோவையில் சுற்றுச்சூழலிற்கு நன்மை விளைவிக்கும் வகையில் இந்தியன் தபால் நிலைய இடத்தில் மரக்கன்றுகள் நடவு


கோவை மாவட்டம், சிட்கோ அருகே அமைந்துள்ள இந்தியன் தபால் நிலையம் பகுதியில் புதர்களால் இயற்கைக்கு கேடுஏற்படுத்தி வந்த 25 சென்ட் நிலப்பரப்பில் தற்போது இந்தியன் தபால் நிலையத்தின் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 



கோவை, சிட்கோ அருகே தொழில் பேட்டை மற்றும் இந்தியன் தபால் நிலைய அலுவலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் முற்புதற்கள் மற்றும் இதர கழிவுகளால் நிலம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை, கோ கிளீன் மற்றும் கிரீன் பேஸ் II ஆகியவை இணைந்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாக வகையிலான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டது.



அதன்படி, கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் தலைமையிலான குழுவினர், மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்ட்டர் ஜெனரல் சாரதா சம்பத், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நடவுசெய்தனர்.



இதுகுறித்து கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் கூறுகையில், "கருவேலமரங்கள் உள்ளிட்டவற்றால் இயற்கைக்கு கேடுவிளைவிக்கும் வகையில் காணப்பட்ட இப்பகுதியினை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் மாற்ற திட்டமிட்டோம். அதன்படி, தற்போது 25 சென்ட் அளவுகொண்ட இடம் தூய்மைபடுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இயற்கை சூழலுக்கு உகந்ததாக இருக்கும்" என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...