உத்தரபிரதேசத்தில் மாநிலம் கோரக்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி 60 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்த இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 குழந்தைகள், பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பகுதியில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகள் மீது உத்தரபிரதேச அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மாவட்ட நீதிபதி ரவீந்திர குமாரும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 19 நோட்டீஸ் அனுப்பி உள்ளார். போதிய வளர்ச்சி இன்றி பிறந்தது, மிக குறைந்த எடையுடன் பிறந்ததே குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் கைலாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து வெளிவரும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்கள், மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.