அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்பப் பயிற்சி

கோவை மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தற்காப்பு மற்றும் நம் பாரம்பரிய கலையினை அறிந்துகொள்ளும் வகையில் அக்னி சிறகுகள் சார்பில் இலவசமாக சிலம்பம் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.



இதற்கான துவக்க விழா பொள்ளாச்சி அருகே உள்ள சங்கபாளையம் பஞ்சாயத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது, பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர் கார்த்திக் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். 

இத்திட்டம் குறித்து இதன் தலைவர் எம்.பிரபு கூறியதாவது:- பயிற்சியாளர்கள் இந்த பள்ளியின் மாணவர்களுடன் முடிந்தவரை நீண்டகால பயிற்சியினை தொடரவும் மற்றும் எதிர்காலத்தில் மற்ற அரசு பள்ளிகளில் இத்திட்டத்தினை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



இப்பயிற்சிகளுக்கு மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் அதீத ஆர்வத்தினைக் காணும்போது பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.



மாணவர்களின் கல்வி நேரம் பாதிக்கப்படாத வகையில் பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்படும். புத்தகங்கள் மற்றும் ஆய்வுளைத் தவிர மாணவர்கள் இதுபோன்ற செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய பயிற்சிகள் இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இப்பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...