நீலகிரியில் கோமாரி தடுப்பு முகாம் இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகை நீத்தி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 13-வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாமினை இன்று (01.09.2017) மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.



முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-

ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் கால்நடைகளை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பசுவை வளர்த்தால் நம் குடும்பத்தை பராமரிக்கலாம். அந்த கால்நடைகள் நமக்கு பால், தயிர், மாமிசம், போன்ற உணவுப் பொருட்களை தருகிறது. கால்நடையான எருது நிலத்தை உழுது விவசாயத்திற்கு ஏற்றவாறு பண்படுத்தும் வேலைகளை செய்கிறது. 

எருது, ஆடு, பசு ஆகிய கால்நடைகளின் சாணங்கள் மூலம் நாம் இயற்கை எரிவாயு தயாரிக்க முடிகிறது. கால்நடைகளின் தோல், உரோமம் மற்றும் பிற உபபொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கிறது.

 

கால்நடைகள் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் மற்றும் ஒரு நாட்டின் வருமானத்தை பெருக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அந்த கால்நடைகள் நோயின்றி காப்பது கால்நடைகள் வளர்ப்பவர்களின் முக்கிய கடமையாகும். ஆகவே ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய் ஆகிய  நோய் கிருமிகளை கண்டு அறிய வேண்டும்.

இந்த நோய்களை வராமல் தடுக்க ஆறுமாதத்திற்கு ஒருமுறை தங்கள் கால்நடைகளுக்கு இலவசமாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 

இதனடிப்படையில் மேற்கண்ட நோய்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஆறுமாதத்திற்கு ஒரு முறை கோமாரி தடுப்பு முகாமினை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இன்று 01.09.2017 முதல் 21.09.2017 வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள 45,000 கால்நடைகளுக்கு  கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் தங்களது கிராமத்தில் எந்த நாளில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரத்தினை தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை கிளை நிலையங்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களிடமுள்ள கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசியினை போட்டு பயனடைய வேண்டும்.

மேலும் இந்த நோயின் தாக்கத்தால் எதிர்பாராமல் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய நமது தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் கால்நடை காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த கால்நடை காப்பீட்டு திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, உழவர் சந்தையிலிருந்து சேரிங்கிராஸ் பகுதியை இணைக்கும் தூய்மைப்படுத்தப்பட்ட நடைபாதையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, உதவி இயக்குநர் மெய்யநாதன், ஆவின் பொதுமேலாளர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...