ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லை- உயர் நீதிமன்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 

அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று தெரிவித்தது. இதற்கு லாரி, டேக்சி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 1) இந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வர இருந்தது. 

இதனிடையே, லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சுகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி "வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும், இதனால் பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் ஏற்படும் என்றும்" அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...