அசல் ஓட்டுனர் உரிமத்தை உரிமையாளர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்- காவல்துறை ஆணையரிடம் டாக்சி ஓட்டுனர்கள் மனு

வாகனம் ஓட்டும் போது ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்றும், செப்டம்பர் 1 முதல் கட்டாயமாக ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். 

இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கடும் என்னும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



வாடகை கார்களை இயக்கும் ஓட்டுனர்கள், அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.

வாகனத்தை ஓட்டுனர்களை நம்பி ஒப்படைப்பதற்கு சாட்சியாக எண்ணி உரிமையாளர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, வாகன உரிமையாளர்கள் வாங்கி வைத்துள்ள அசல் ஓட்டுனர் உரிமத்தை, மீண்டும் ஓட்டுனர்களிடமே ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.

இவ்வறு, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...