தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஜவஹிருல்லா, தலைவர்-மனித நேய மக்கள் கட்சி


ஆளுநர் வித்யாசாகர்   ராவ்வை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் சந்தித்து  சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்தார்.

மியான்மர் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், அம்னிஸ்டி சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக மியான்மர் ராணுவம் ரோகிந்தியா பகுதியில் முஸ்லீம்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சுவான் சுகி மியான்மருடைய அதிபராக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இனப்படுகொலைகள்

நடத்தப்படுவதாகவும், சர்வதேச நாடுகள் இந்த படுகொலைகள் குறித்து அமைதிகாத்து வருவதாக கூறியவர், இந்தியா அரசு உடனடியாக மியான்மரை கண்டிக்க வேண்டும் என்றவர் மியான்மர் உடனான தூதரகத்தை திரும்பபெறவேண்டும் என்றார். மேலும்.இது குறித்து ஐ நா மனித உரிமை அமைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜவஹிருல்லா தெரிவித்தார். 

இன்று காலை திமுக, சிபிஎம், விடுதலை. சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக பொறுப்பு  ஆளுநரை பார்த்து சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும்  எடப்பாடி அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை  நடக்க உத்திரவிட கூறியதாக தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காகவும், அரசியல் அமைப்பை காப்பதற்காகவும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...